முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் படகு மோதிய விபத்தில் 101 பேர் பத்திரமாக மீட்பு

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      இந்தியா
Mumbai 2024-03-26

மும்பை, ​மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படை​யின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

மும்பை அருகேயுள்ள எலிபென்டா தீவில் புகழ்​பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்கரையிலிருந்து படகுகளில் செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோருடன், நீல்​கமல் என்ற படகு மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியிலிருந்து எலிபென்டா தீவு நோக்கி நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்டது. அப்போது அந்த வழியாக கடற்படையின் ரோந்து படகு சென்றது. அந்த படகு நேற்றுமுன்தினம் மாலை 3.55 மணியளவில், கட்டுப்​பாட்டை இழந்து பயணிகள் படகு மீது அதிவேகத்தில் மோதியது. இதில் பயணிகள் படகு பலத்த சேதம் அடைந்து, ஒரு பக்கமாக சாய்ந்தது. இதனால் படகில் இருந்த பயணிகள் சிலர் கடலில் விழுந்தனர்.

இத்தகவல் அறிந்ததும் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் படகுகளில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்​டனர். கடலில் விழுந்த 13 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். படகில் சென்ற பயணிகள் 101 பேர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். காயம் அடைந்தவர்கள், உடல்​நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்​டனர்.

மீட்பு பணி குறித்து இந்திய கடலோ காவல் படை ஐ.ஜி. பிஷம் சர்மா கூறுகையில், மும்பை கடல் பகுதியில் கடலோர காவல் படை மற்றும் கடற்படை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்​டுள்ளன. எங்களது கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன என்றார். இந்த விபத்து குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள தகவலில், எலிபென்டா தீவுக்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீல்​கமல் என்ற படகு மீது கடற்​படையின் அதிவேக ரோந்து படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்​ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 101 பேர் மீட்கப்பட்டுள்​ளனர்.

மீட்பு பணியில் கடற்படை மற்றும் கடலோ காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்​ளது என்றார். மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணைய தலைவர் உன்மேஷ் வக் அளித்த பேட்டியில், எங்கள் துறைமுகத்துக்கு சொந்தமான பைலட் படகு விபத்து நடந்த இடத்தை நேற்றுமுன்தினம் மாலை கடந்து சென்றது. அந்த படகு மூலம் 40 பேர் மீட்கப்பட்டு துறைமுக ஆணைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து