முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான், ஜெய்ப்பூர் அருகே விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024      இந்தியா
Modi 2024-12-20

Source: provided

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், ஜெய்ப்பூர் அருகே டேங்கர் லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ஜெய்ப்பூர் அருகே பங்ரோதா என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அங்கு நேற்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அப்போது ரசாயனம் ஏற்றி இருந்த டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் நிரப்புவதற்காக அந்த பெட்ரோல் பங்க்குக்கு வந்தது. அப்போது அந்த ரசாயன டேங்கர் லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கியாஸ் லாரி மீது பயங்கரமாக மோதியது.

2 லாரிகளும் மோதிய வேகத்தில் ரசாயன லாரியில் தீப்பிடித்தது. அந்த தீ கியாஸ் லாரி மீது பரவியது. இதனால் கண் இமைக்கும் நேரத்துக்குள் கியாஸ் நிரப்பப்பட்டிருந்த லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த தீப்பொறிகள் பெட்ரோல் பங்க் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற டேங்கர் லாரிகள் மீது விழுந்தன. இதனால் அந்த லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி முழுக்க தீப்பிடித்து எரிந்தது போன்று மாறியது.

லாரிகளில் பிடித்த தீ பெட்ரோல் பங்குக்கும் பரவியது. இதனால் அந்த பெட்ரோல் பங்க் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தீ பிழம்புகள் வெளியானது. இது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிந்தது. லாரிகளும், பெட்ரோல் பங்க்கும் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. அந்த பகுதியில் இருந்தவர்களும், டேங்கர் லாரி டிரைவர்களும், பெட்ரோல் பங்க் ஊழியர்களும் அலறியடித்து உயிர் பிழைக்க ஓடினார்கள்.

இந்த கோர தீ விபத்து நேற்று காலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது. ஏற்கனவே பனிப்பொழிவு காரணமாக அந்த பகுதியில் அடர்புகை இருந்தது. தீப்பு கையும் சேர்ந்து கொண்ட தால் டேங்கர் லாரி டிரை வர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். 40-க்கும் மேற்பட்டவர் கள் புகை மூட்டத்துக் குள்ளும், தீப்பிடித்த லாரி களுக்கும் சிக்கிக்கொண்ட னர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பல்வேறு பகுதி களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதன் பிறகு மீட்பு பணிகள் நடந்தன. அப்போது 8 பேர் கருகி பலியாகி இருப்பது தெரிய வந்தது. தீக்காயங்களுடன் 37 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர் களை போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் மீட்டு ஜெய்ப்பூரில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். லாரி களில் பிடித்த தீ நீண்ட நேரம் எரிந்ததால் கடுமையான கரும்புகை கிளம்பியது.

அந்த கரும்புகை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவியதால் மக்கள் மத்தியில் பதட்டம் உருவானது. இதையடுத்து கூடுதல் மீட்பு படையினர் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கோர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் முழுமையாக எரிந்து சாம்பலாகி விட்டன. அதுபோல பெட்ரோல் பங்க்கிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல்-டீசல் நிரப்ப வந்திருந்த தனியார் வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்தன. எத்தனை வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமானது என்று போலீசார் கணக்கு எடுத்து வருகிறார்கள். 

இந்நிலையில் பிரதமர் மோடி தீவிபத்து சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மேலும் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து