முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. எம்.பி.க்கள் தள்ளியதில் தனக்கு காயம்: ஓம் பிர்லாவுக்கு கார்கே புகார் கடிதம்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      இந்தியா
Malligarjuna 2023-07-27

டெல்லி, பா.ஜ.க. எம்.பி.க்கள் தள்ளியதால் எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கார்கே மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

பா.ஜ.க. எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார் கடிதம் அளித்துள்ளார். மாநிலங்களவையில் கடந்த நேற்று முன்தினம் பேசிய அமித் ஷா, அம்பேத்கர் குறித்து தரக்குறைவாக பேசியதாக அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என்று கூறியிருந்தார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து 2-வது நாளாக அமித் ஷாவை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று காலை பேரணியில் ஈடுபட்டபோது பா.ஜ.க. எம்.பி.க்களால் நான் தள்ளப்பட்டேன். இதனால் நாள் நிலைகுலைந்து தரையில் உட்கார வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். இதனால் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்திருக்கும் எனது முழங்கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் கொண்டு வந்த நாற்காலியில் அமர்ந்தேன். மிகுந்த சிரமத்துடன் சக எம்.பி.க்களின் உதவியுடன் எனது இல்லத்திற்கு திரும்பினேன். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து