முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி : இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவு

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024      இந்தியா
stock-market 2023 06 28

Source: provided

மும்பை : பங்குச்சந்தையில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று காலை 79,335.48 என்ற புள்ளிகளில் தொடங்கியது.வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 1,176.45 புள்ளிகள் குறைந்து 78,041.59 புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 364.20 புள்ளிகள் குறைந்து 23,587.50 புள்ளிகளும் குறைந்தது.

ஜே.எஸ்.டபிள்.யூ. ஸ்டீல், நெஸ்லே, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஏற்றம் கண்டன. பெரும்பாலாக அனைத்து நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.ஒட்டுமொத்தமாக இந்த வாரத்தில் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த வாரம் மட்டும் சென்செக்ஸ் 4,000 புள்ளிகள் சரிந்துள்ளது. கடந்த 2022 ஜூன் மாதத்திற்குப் பிறகு தற்போது பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் ரூ. 19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வங்கி, வட்டி விகிதக் குறைப்பை அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டு இது செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் தாக்கம் உலகளாவிய சந்தைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்று வருகின்றனர். நேற்று மட்டும் கடந்த 4 அமர்வுகளில் 12,000 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளது பங்குச்சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 85.03 ஆக உள்ளது.   மேலும், முதல் 2 காலாண்டுகளில் பெரிதாக வளர்ச்சி கண்டிராத பெரிய நிறுவனங்கள் நடப்பு காலாண்டில் வருவாயினை மீட்க முயற்சித்து வருவதும் வங்கி, நிதி, ஐ.டி. என பெரிய துறைகள் எதுவும் சரியாக வளர்ச்சி காணாததும் காரணங்களாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து