முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை முன்மாதிரி நாடாக மாற்ற நாம் பணியாற்ற வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024      தமிழகம்
Mohan-Bhagwat 2024-08-28

புனே, நாம் இந்தியாவை முன்மாதிரியான நாடாக மாற்ற பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா என்றும், பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இங்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புனேவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- நீண்ட காலமாக நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இதனை உலக நாடுகளுக்கும் கொண்டு சென்றால், நம்முடைய நாடு தான் முன்மாதிரியான நாடாக திகழும். ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, இந்து தலைவர்கள் இதுபோன்று பல்வேறு இடங்களில் செய்வார்கள் என்று சிலர் நினைக்கின்றனர். அது ஏற்றுக்க முடியாதது.

அயோத்தி ராமர் கோவில் இந்துக்களின் நம்பிக்கை. எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்னையை கிளப்புகிறார்கள். இதனை எப்படி அனுமதிக்கிறார்கள்? இது தொடர அனுமதிக்கக் கூடாது. நம்மால் ஒற்றுமையுடன் வாழ முடியும் என்பதை இந்தியா நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இந்தியர்கள் முன்பு செய்த தவறுகளை சரி செய்து விட்டு, உலக நாடுகளில் இந்தியாவை முன்மாதிரியான நாடாக மாற்ற பணியாற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நம்முடைய நாடு இயங்கி வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு வழிநடத்துகிறது. மேலாதிக்கத்தின் நாட்கள் முடிந்து விட்டது என அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து