முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க அம்பேத்கர் பெயரில் உதவித்தொகை : அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      இந்தியா
Kejriwal 2024-03-10

Source: provided

டெல்லி : டெல்லியில் தலித் மாணவர்களுக்கு இலவச வெளிநாட்டுக் கல்விக்கான அம்பேத்கர் உதவித்தொகையை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைமையகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை அவமதித்து கேலி செய்தார். இதனால் அம்பேத்கரை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.

கல்விதான் முன்னோக்கிச் செல்லும் வழி என்று அம்பேத்கர் கூறியுள்ளார். அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக அமெரிக்காவில் சென்று பிஎச்டி பட்டம் பெற்றவர் அம்பேத்கர். எனவே, இந்த உதவித்தொகையானது இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பிக்கு பா.ஜ.க. இழைத்த அவமானத்திற்குப் பதில் என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம், டெல்லியைச் சேர்ந்த தலித் மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க முடியும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி கிடைத்தால், அவர்களின் கல்வி, பயணம் மற்றும் தங்குமிடத்திற்கான முழு செலவையும் டெல்லிஅரசே ஏற்கும்.அரசு ஊழியர்களின் குழந்தைகளும் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள், எப்படி, எப்போது உதவித்தொகை வழங்கப்படும் என்பதை விவரிக்காமல் இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர், தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதம் ரூ.2,100 மற்றும் மூத்த குடிமக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து