முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      இந்தியா
Stalin 2021 11 29

Source: provided

டெல்லி: மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லிக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை  செயல்படுத்த உதவியர் என்றும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- 

மன்மோகன் சிங் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய நாட்டிற்கே பேரிழப்பு. கலைஞர் கருணாநிதி மீது பற்று கொண்டவர். தமிழர்களின் பல்லாண்டு கனவான செம்மொழி திட்டத்தை நிறைவேற்றி தந்தவர் மன்மோகன் சிங். தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருந்தார். தமிழகத்தில் மெட்ரோ ரெயில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திர திட்டம் வருவதற்கு மன்மோகன் சிங் தான் காரணம். நூறு நாள் வேலை என்ற புரட்சிகர திட்டத்தை கொண்டு வந்தவர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து