முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆா்ப்பாட்டம் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மன்மோகன் சிங் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் சிறந்த பொருளாதார நிபுணர் என்றும் புகழாரம்

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை: மன்மோகன் சிங் மறைவு காரணமாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் 30ம் தேதி நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, அ.தி.மு.க. சாமபில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிச.27) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் நேற்றைய போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அ.தி.மு.க. சார்பில் வரும் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:- முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது பணவியல் மற்றும் நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கியது. 

அவர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், திறமையான நிர்வாகி மற்றும் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து