முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் மக்களை அச்சுறுத்திய புல்லட் யானை மயக்க ஊசி போட்டு பிடிப்பு

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      தமிழகம்
Elebent 2024-01-17

Source: provided

நீலகிரி : பந்தலூர் மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளது. இதில் புல்லட் என்று அழைக்கப்படும் யானை தொடர்ந்து குடியிருப்புகளை, இடித்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாக வீடுகளை சேதப்படுத்தியதுடன், மனிதர்களையும் தாக்கி கொன்றுள்ளது. இதுவரையில் 40 வீடுகளை இடித்து தள்ளியுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். மேலும், புல்லட் யானையின் அச்சுறுத்தலால், தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் வேலைக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக, கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் கும்கி யானையுடன் வனத்துறையினர் புல்லட் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி பகுதியில் நேற்று புல்லட் யானைக்கு மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். யானை மயக்க நிலையை அடைந்த பிறகு, அதன் 4 கால்களையும் கயிறு மூலம் கட்டி கும்கி உதவியுடன் லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர். வீடுகளை இடித்து அச்சுறுத்தி வந்த புல்லட் யானை பிடிபட்டதால், கூடலூர், பந்தலூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து