முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசனில் மட்டும் 32 லட்சம் பேர் சாமி தரிசனம்

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      ஆன்மிகம்
Sabarimala 2024-11-24

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலை அய்யபன் கோவிலில் மண்டல பூஜையில் 32.50 லட்ச பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்க இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

ஆன்லைன் முன்பதிவு மூலமாக தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும், உடனடி முன்பதிவு மூலமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 41 நாட்களாக நடந்து வந்த மண்டல பூஜை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. முன்னதாக, மண்டல பூஜையை முன்னிட்டு அய்யப்பனுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அதே அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அய்யப்பன் காட்சியளித்தார். கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக  ஆன்லைன் முன்பதிவு முறையில் 60 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு முறையில் 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

மண்டல பூஜை முடிந்து நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. கடந்த 41 நாட்கள் நடந்துவந்த மண்டல பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே சீசன் காலத்தில் 28 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சபரி மலைக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.7லட்சம் பக்தர் கள் அதிகமாக வந்திருக்கிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து