முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் முன்பு மாணவி தள்ளி கொலை: கைதான இளைஞர் குற்றவாளி; சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      தமிழகம்
00

Source: provided

சென்னை: ரெயில் முன்பு மாணவியை தள்ளி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவருக்கான தண்டனை விபரங்கள் வரும் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றினார். இவர்களது மூத்த மகள் சத்யா, தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவரது மகன் சதீஷ் என்பவரை காதலித்து வந்தார். பெற்றோர் கண்டித்ததால் சத்யா, திடீரென்று காதலை கைவிட்டார். இதனால் மனமுடைந்த சதீஷ், கடந்த 13.10.2022 அன்று கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரெயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை, அந்த வழியாக வந்த ரெயில் முன்பு தள்ளி படுகொலை செய்தார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சத்யா கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சதீஷை கைது செய்தனர். போலீசாரின் விசாரணை முடிவடைந்த நிலையில் சதீஷ் மீது 11.1.2023 அன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின்பு, இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் போலீசார் தரப்பில் ஆஜராவதற்காக ரவீந்திரநாத் ஜெயபால் என்பவர் சிறப்பு அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், வழக்கில் 27-ந் தேதி (அதாவது நேற்று) தீர்ப்பு கூறப்படும் என மகளிர் கோர்ட்டு அறிவித்தது.

அதன்படி, கல்லூரி மாணவியை ரெயில் முன் தள்ளி கொன்ற வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் கைதான சதீஷ் குற்றவாளி என மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் சதீஷுக்கான தண்டனை விபரங்கள் வரும் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து