முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்மன் கில் குறித்து துணை பயிற்சியாளர் அபிஷேக்

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      விளையாட்டு
Subman-Gill 2023-09-06

Source: provided

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது.முன்னதாக இந்த போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். இந்த தொடரில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்ததால் அவர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சுப்மன் கில் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " சுப்மன் கில்லுக்காக நான் வருந்துகிறேன். அவர் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. அணிக்கு தேவைப்படும் கலவையில் அவரால் தனது இடத்தை கண்டறிய முடியவில்லை. அதை அவரும் புரிந்து கொண்டார்" என்று கூறினார்.

______________________________________________________________________________________________

ராகுலை சீண்டிய நாதன் லயன்

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் தொடங்கியது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்துள்ளது. பண்ட் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 310 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல், இந்த போட்டியில் 3-வது வரிசையில் களமிறக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து கே.எல். ராகுல் 3-வது வரிசையில் களமிறங்கினார். அப்போது ஆஸ்திரேலிய வீரரான நாதன் லயன் அவரை நோக்கி, "பேட்டிங்கில் 3-வது வரிசை செல்லும் அளவிற்கு நீ என்ன தவறு செய்தாய்?" என்று ஸ்லெட்ஜிங் செய்தார். முந்தைய போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடியதை சுட்டிக்காட்டி அவர் கிண்டலடித்துள்ளார்.

______________________________________________________________________________________________

கோலியை விமர்சித்த ரசிகர்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டயின் முதல் இன்னிங்சில் 51 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜெய்ஸ்வால் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே விராட் கோலி 36 ரன்களில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி ஆட்டமிழந்து பெவிலியன் சென்றபோது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்தனர். அதனை பொறுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்த விராட் கோலியை சிலர் எல்லை மீறி விமர்சித்துள்ளனர். இதனால் கோபமடைந்த விராட் திரும்பி வந்து அவர்களை முறைத்து பார்த்தார். இதனைக்கண்ட அங்கிருந்த பாதுகாவலர் கோலியை சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

______________________________________________________________________________________________

பந்து வீச்சாளர்கள் மீது குற்றச்சாட்டு

முதல் இன்னிங்சில் இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. 2வது நாளில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி சீக்கிரம் ஆல் அவுட் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல பும்ரா ஒருபுறம் கட்டுப்பாட்டுடன் பந்து வீசிய நிலையில் எதிர்புறம் சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் சுமாராக பந்து வீசி ரன்களை கொடுத்தார்கள்.

அதே போல ரோகித் சர்மாவும் ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தாமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்தார். இது தொடர்பாக ரவி சாஸ்திரி தனது கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணி ஐடியா இல்லாமல் ஓடுகிறது. பவுலிங் சுமாராகவே இருக்கிறது. சுழற்பந்து வீச்சை பயன்படுத்த வேண்டிய அளவுக்கு பயன்படுத்தப்படவில்லை. 40 ஓவர்கள் பின்பு தான் ஜடேஜா,வாஷிங்டன் சுந்தர் வருகின்றனர். ஒருவேளை நீங்கள் 2 ஸ்பின்னர்களை நம்பாவிட்டால் எதற்காக அணியில் தேர்ந்தெடுத்தீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

______________________________________________________________________________________________

பாகிஸ்தான் வீரர் புதிய சாதனை 

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 54 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது. எய்டன் மார்க்ரம் 42 ரன்னுடனும், தெம்பா பவுமா 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

முன்னதாக பாகிஸ்தானின் முதல் இன்னிங்சில் முன்னணி வீரரான பாபர் அசாம் 4 ரன்னில் அவுட் ஆனார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 4000 ரன்களை கடந்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் விராட், ரோகித்துக்கு பின் 3வது வீரரான வரலாற்று சாதனை ஒன்றை பாபர் அசாம் நிகழ்த்தி உள்ளார். அதாவது, மூன்று வித கிரிக்கெட் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) போட்டிகளிலும் சர்வதேச அளவில் 4000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டிய 3வது வீரர் மற்றும் முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த சாதனை பட்டியலில் முதல் இரு இடங்களில் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளனர்.

______________________________________________________________________________________________

7) விராட் ஆஸி. ஊடகங்கள் விமர்சனம்

இந்திய வீரர் விராட் கோலியை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்திய, ஆஸி. மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று (டிச.26) தொடங்கியது. இதில் ஆஸி. 474 க்கு ஆல் அவுட்டானது. தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. ஆஸி. இளம் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸை விராட் கோலி தேவையின்றி மோதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கோலிக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு குறித்து ஆஸி. ஊடகங்கள் இந்திய வீரர் விராட் கோலியை கடுமையாக விமர்சித்துள்ளன. பிஜிடி தொடருக்கு முன்பாக கோலியை பாராட்டி எழுதி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பும்ராவின் ஓவரில் ரேம்ப் ஷாட் அடித்து 16. 18 ரன்கள் என தொடர்ச்சியாக அடித்து அசத்தினார். ஒரேநாளில் சாம் கான்ஸ்டாஸ் நாயகனாக மாறினார்.  விராட் கோலியை முன்னாள் இந்திய வீரர்களும் விமர்சனம் செய்தார்கள். ஆனால், தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் செய்திதாளில் ஒருபடி முன்னே சென்று ’கோமாளி கோலி’ என செய்தியை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து