முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்பில் சோகம்: பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      இந்தியா
Accident-1

Source: provided

பதிண்டா : பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் பேருந்து அதிவேகத்தில் சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் விழுந்திருக்கலாம் என  துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் தல்வாண்டியில் இருந்து பதிண்டா நோக்கி நேற்று பயணிகளை ஏற்றி வந்த பேருந்து, பாலத்தில் இருந்து ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த மழை பெய்துகொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று பேருந்திற்குள் சிக்கியவர்களை மீட்கத் தொடங்கினர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பாலத்தில் தடுப்பு சுவரோ, தடுப்பு கட்டைகலோ இல்லை. தடுப்பு கட்டைகள் இருந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம். பேருந்து சறுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதற்கு கனமழை காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பேருந்து அதிவேகத்தில் சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரசு உதவிகள் வழங்கப்படும் என்றும் பதிண்டா துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து