முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலை. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் தொடங்கப்படும் : அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      தமிழகம்
Kovi-Chezhian 2024-11-09

Source: provided

சென்னை : அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் திறக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறி உள்ளார்.

கல்லூரி பேராசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. எந்த வித குறுக்கீடும், முறைகேடும் இல்லாமல் 350-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்தாய்வு மூலம் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழலில் அண்ணா பல்கலையில் நடந்த நிகழ்வு யாரும் எதிர்பாராதது. பல்கலைக்கழக மாணவி, ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தகாத நபர், விரும்பாத காரியத்தை செய்ததன் விளைவு. 23-ம் தேதி நடந்த சம்பவம், 25-ம் தேதி புகார் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புகார் மனு பெற்ற குறுகிய நேரத்தில் அந்த நபரும் கைது செய்யப்பட்டு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கல்லூரியிலும், பல்கலைக்கழத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கமிட்டிக்கு புகார் அளித்தாலும் விசாரிப்பார்கள் அல்லது இந்த கமிட்டியைச் சேர்ந்தவர்கள் மாணவிகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் ஐயம் கொண்டால் நீங்களாகவே கூப்பிட்டு கவுன்சிலிங் செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம்.

அந்த வகையில் அண்ணா பல்கலையில் கமிட்டியின் கருத்து எங்களுக்கு வர வில்லை என்பது சங்கடமான செய்தி. காவல் நிலையத்திற்கு புகார் போன பிறகு தெரிகிறது. பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு தருகிறது. துறையின் அமைச்சர் என்ற முறையிலும் நானும் முழு ஒத்துழைப்பு தந்து கொண்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து