எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து நேற்று (டிச.27) காலை போராட்டம் நடத்தினார். கோவை,காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன் நேற்று காலை 10 மணியளவில் தொண்டர்கள் முன்னிலையில் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “நாங்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டம் இன்னும் தீவிரமடையும். இது தனி நபருக்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்துள்ளது. பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே இந்தப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
எதற்காக 6 முறை சாட்டையடி என்று நீங்கள் கேட்கலாம். முருகப் பெருமானிடம் இந்த ஆறு சாட்டையடி மூலம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளோம். நம் தமிழ் மண்ணில் உடலை வருத்தி இறைவனிடம் வைக்கப்படும் வேண்டுதலுக்கு ஒரு விளைவு இருக்கும் என்பது நம்பிக்கை. நான் அந்த மரபையே பின்பற்றி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். தெரிந்தோ தெரியாமலோ நாங்களே கூட ஏதேனும் தவறு செய்திருக்கலாம். அதற்குக் கூட இது தண்டனையாக இருக்கட்டும்.
நான் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட வழக்கை விசாரித்தேன். குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்தேன். அப்போது அந்தச் சிறுமியின் தாய் என்னிடம் “குற்றவாளியை பிடித்துவிட்டீர்கள், என் மகளைத் திருப்பித் தருவீர்களா?” எனக் கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி என்னை அரசியலில் பயணிக்க வைத்தது. எல்லோரையும் போல் ஒரு பிரச்சினை வரும்போது அதைப்பற்றி பேசிவிட்டு பின்னர் மறந்துவிட்டு அதன் பின்னர் அடுத்த பிரச்சினையைப் பேசும் அரசியல்வாதியாக என்னால் இருக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது.
அதனால், நான் நன்றாக யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். திமுக ஆட்சியிலிருந்து அகற்றப்படும் வரை காலணியை அணியப் போவதில்லை. இந்த ஆட்சி தவறு செய்கிறது. அறவழியில் போராடக் கூட அனுமதியில்லை. எல்லாவற்றையும் கண்டித்தே நாங்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். நாங்கள் தவறுகளைக் கண்டித்து அரசியல் செய்கிறோம்.
அரசியலில் தேர்தல் வெற்றி, தோல்வி எல்லாம் பெரிய பொருட்டல்ல. 2026 தேர்தலில் தோற்றாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன். நான் சாராயம் விற்ற காசிலும், கமிஷன் காசிலும் தேர்தலை எதிர்கொள்ளவில்லை. மாறாக விவசாயத்தில் வந்த காசை வைத்து நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டேன். லண்டன் சென்று திரும்பியபின் என் அரசியல் பார்வை மாற்றம் பெற்றுள்ளது. மற்றபடி என்னைப் பற்றி சமுகவலைதளங்களில் விமர்சிப்பவர்கள் பற்றி எனக்குக் கவலையில்லை” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 weeks ago |
-
நல ஓய்வூதியத்தில் மோசடி: கேரள அரசு ஊழியர்கள் 38 பேர் பணியிடை நீக்கம்
27 Dec 2024திருவனந்தபுரம் : நல ஓய்வூதியத்தில் மோசடி செய்ததாக கேரள அரசு ஊழியர்கள் 38 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
27 Dec 2024சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 3 நாளில் உருவாக உள்ளது.
-
ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
27 Dec 2024ஜெருசலேம் : ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை
27 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் சம்பவம் தொடர்பா
-
அ.தி.மு.க. ஆா்ப்பாட்டம் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மன்மோகன் சிங் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் சிறந்த பொருளாதார நிபுணர் என்றும் புகழாரம்
27 Dec 2024சென்னை: மன்மோகன் சிங் மறைவு காரணமாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் 30ம் தேதி நடைபெறும் என்று அ.தி.மு.க.
-
சுப்மன் கில் குறித்து துணை பயிற்சியாளர் அபிஷேக்
27 Dec 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது.
-
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசனில் மட்டும் 32 லட்சம் பேர் சாமி தரிசனம்
27 Dec 2024திருவனந்தபுரம் : சபரிமலை அய்யபன் கோவிலில் மண்டல பூஜையில் 32.50 லட்ச பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
பிரேசிலில் பாலம் இடிந்து 8 பேர் பலி
27 Dec 2024பிரேசிலில் : பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 9 பேர் மாயமாகியுள்ளனர்.
-
தென்கொரியாவில் இடைக்கால அதிபரும் பதவி நீக்கம்
27 Dec 2024சியோல் : தென்கொரியாவின் இடைக்கால அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
-
பாக்.கிற்கு எதிரான ராணுவ நடவடிக்கை: மன்மோகன் சிங் தன்னுடன் பேசியதாக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் தகவல்
27 Dec 2024புதுடெல்லி: 2011ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து பிரதமராக இருந்த மன்மோகன் தன்னிடம் பேசியதாக பிரிட்
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக சதங்கள் அடித்து ஆஸி. வீரர் ஸ்மித் புதிய சாதனை
27 Dec 2024மெல்போர்ன் : பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.
-
தயாரிப்பு பணிகள் தீவிரம்: இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 6-ம் தேதி வெளியீடு : புதிய வாக்காளர் அட்டைகள் ஜன.26 முதல் விநியோகம்
27 Dec 2024சென்னை : தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 6-ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ரயில் முன்பு மாணவி தள்ளி கொலை: கைதான இளைஞர் குற்றவாளி; சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பு
27 Dec 2024சென்னை: ரெயில் முன்பு மாணவியை தள்ளி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு மத்திய அரசு அறிவிப்பு
27 Dec 2024டெல்லி: மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
-
பல்கலை. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் தொடங்கப்படும் : அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
27 Dec 2024சென்னை : அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் திறக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறி உள்ளார்.
-
பாக்.கில் ராணுவம் தாக்குதல்: பயங்கரவாதிகள் 15 பேர் பலி
27 Dec 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத குழு தலைவர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
-
வேண்டுமென்றே அவர் செய்யவில்லை: கோலி மோதல் குறித்து கான்ஸ்டாஸ் விளக்கம்
27 Dec 2024மெல்போர்ன் : விராட் - கான்ஸ்டாஸ் மோதல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விராட் கோலி வேண்டுமென்றே என் மீது மோதவில்லை என்று ஆஸ்திரேலிய இளம் வீரர் கான்ஸ்டாஸ
-
'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி: இந்திய அணி தடுமாற்றம்
27 Dec 2024மெல்போர்ன் : பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி 164 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
-
அண்ணா பல்கலைக்கழகத்தில் கவர்னர் இன்று நேரில் ஆய்வு
27 Dec 2024சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
-
வரும் 2025-ம் ஆண்டில் நிகழும் 4 கிரகணங்கள்
27 Dec 2024இந்தூர் : அடுத்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ உள்ளன.
-
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
27 Dec 2024ஏமன் : ஏமனில் உள்ள தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு
27 Dec 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு நேற்று விற்பனையானது.
-
கொடிநாள் நிதி வசூல்: நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்
27 Dec 2024சென்னை : கொடிநாள் நிதி வசூலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி பிரியங்கா நேரில் அஞ்சலி
27 Dec 2024டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் பயங்கரம்: 2 பெண்கள் கத்தியால் குத்திக்கொலை
27 Dec 2024இங்கிலாந்து : இங்கிலாந்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 2 பெண்கள் பலியானார்கள்.