முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈடு இணையற்ற பொருளாதார மேதை மன்மோகன் சிங்: வைகோ

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      தமிழகம்
Vaiko 2023 05 01

Source: provided

சென்னை : மன்மோகன் சிங் ஈடு இணையற்ற பொருளாதார மேதை என்ரு வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

ஈடு இணையற்ற பொருளாதார மேதையும், ஜனநாயகக் காவலருமான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அளவற்ற அதிர்ச்சியும், ஆரா துயரமும் கொண்டேன். இமாலயப் பொறுமைக்கு இலக்கணம் வகுத்தவரும், எளிமையானவரும், உலக நாட்டுத் தலைவர்களிடையே மதிப்பையும் பெற்றிருந்த மாமனிதர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஈடு இணையற்ற பொருளாதார மேதையும், ஜனநாயகக் காவலருமான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அளவற்ற அதிர்ச்சியும், ஆரா துயரமும் கொண்டேன்.

மிகச் சிறந்த பண்பாட்டுப் பெட்டகம்; அடக்கத்திற்கும் எளிமைக்கும் இலக்கணம் வகுத்த உத்தமர். அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது, வீட்டிலிருந்து அரசு வாகனத்தில் செல்லாமல், மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்வார். அவருடைய பேச்சில் நாடாளுமன்ற உரைகளில் கடின வார்த்தைகளே இருக்காது. மென்மையான, நெகிழ்ச்சியான சொற்களையே பயன்படுத்துவார்.

2004 இல் அவர் பிரதமரானபோது, இந்திய அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்திற்கு நான் வடிவம் கொடுத்து ஓர் அறிக்கையை அவரிடம் தந்தேன். அவரும், பிரணாப் முகர்ஜியும், ஜெயராம் ரமேஷ் அவர்களும் குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தபோது என்னுடைய அறிக்கையின் முக்கியமான பகுதிகளை அப்படியே அந்த அரசு திட்ட அறிக்கையில் சேர்த்துக்கொண்டார். அதனால்தான் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்திற்கு மதுரையில் தொடக்க விழா நடந்தபோது, டாக்டர் மன்மோகன் சிங் என்னைப் பார்த்து, “உங்கள் கனவு நிறைவேறப் போகிறது” என்றார்.

இமாலயப் பொறுமைக்கு இலக்கணம் வகுத்தவரும், எளிமையானவரும், உலக நாட்டுத் தலைவர்களிடையே மதிப்பையும் பெற்றிருந்த மாமனிதர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அந்தப் பெருந்தகை மறைவுக்கு மதிமுக சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து