முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் அணி

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      விளையாட்டு
Women s-team 2024-07-13

Source: provided

வதோதரா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்ற நிலையில் 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்து  இந்திய அணி தொடரை வென்றுள்ளது.

சுற்றுப்பயணம்... 

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்றது.

அபார பந்துவீச்சு...

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38.5 ஓவர்களில் 162 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 61 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதனையடுத்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மந்தனா 4 ரன்களிலும், பிரதிகா ரவால் 18 ரன்களிலும், ஹர்லீன் தியோல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

தீப்தி- கோஷ் அபாரம்... 

இருப்பினும் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 32 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா - ரிச்சா கோஷ் இணை இந்திய அணியை வெற்றி பெற வைத்தது. வெறும் 28.2 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 167 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகியாக....

பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஜொலித்த தீப்தி சர்மா 39 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. தீப்தி சர்மா ஆட்ட நாயகியாகவும், ரேனுகா சிங் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து