முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காவல்துறையில் 4 ஏ.டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      தமிழகம்
Shankar-Jiwal 2023 06 24

Source: provided

சென்னை : தமிழக காவல்துறையில் 4 ஏ.டி.எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல்துறையில் 4 ஏ.டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் ஏ.டி.எஸ்.பியாக இருந்த மணிகண்டன், நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏ.டி.எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவின் ஏ.டி.எஸ்.பியாக இருந்த பிரேமானந்தன், கோவை மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவின் ஏ.டி.எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி காவல்துறையின் தலைமையக ஏ.டி.எஸ்.பியாக இருந்த தங்கவேல், காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏ.டி.எஸ்.பியாகவும், திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் ஏ.டி.எஸ்.பியாக இருந்த சவுந்தரராஜன், நீலகிரி மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவின் ஏ.டி.எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து