முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு அரசு மரியாதையுடன் மன்கோகன் சிங் உடல் தகனம் ஜனாதிபதி, பிரதமர் மோடி இறுதி அஞ்சலி

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      இந்தியா
murmu 2024-12-28

Source: provided

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் யமுனை நதிக்கரையில் உள்ள டெல்லி நிகம்போத் காட் பகுதியில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நேற்று காலை மன்மோகன் சிங்கின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், ஜெயராம் ரமேஷ், சசி தரூர், பவன் கெரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்தும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுரும், காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்து கணவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் உடல் அங்கிருந்து டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

நிகம்போத் காட் பகுதிக்கு வருகை தந்து ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் உள்ளிட்டோர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தலைவர்களின் இறுதி மரியாதையை அடுத்து மன்மோகன் சிங்கின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டு, உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சந்தனக் கட்டைகள் மீது மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்பட்டு, சீக்கிய மத முறைப்படி மந்திரங்கள் ஓதப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில், மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர், மகள்கள், நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சடங்குகளைச் செய்தனர். பின்னர் மன்மோகன் சிங் உடலைச் சுற்றி கட்டைகள் வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பகல் 1 மணி அளவில் 21 குண்டுகள் முழங்க  முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, மன்மோகன் சிங்கின் உடல் எரியூட்டப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து