முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை தேவை : பா.ம.க. சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
Ramdos 2024-12-28

Source: provided

சென்னை : பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு புதுச்சேரியில் உள்ள சங்கமித்ரா மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியை அமைப்பதற்கான வலுவான அடித்தளத்தை கட்டமைக்கும் ஆண்டாக 2025-ம் ஆண்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது. மேலும் சிறப்பு பொதுக்குழுவில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம் பின்வருமாறு:-

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கட்டாயமாக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும், தமிழ்நாட்டில் சமூகநீதியைப் பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தி.மு.க. அரசுக்கு கண்டனம்,மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி. உள்இடஒதுக்கீடு, ரோகிணி ஆணைய அறிக்கையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உறுப்பினர்களை விரைந்து நியமிக்க வேண்டும். வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதானி ஊழல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உள்ள தொடர்பு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழ்நாட்டில் 3 முறை உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும். தமிழ்நாட்டு உழவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பரிந்துரைக்கவும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக் கொண்டுவர சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணை பெற்ற டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள 6.25 லட்சம் அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும். என்.எல்.சி. நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு வழங்கத் தவறிய தமிழக அரசுக்கு கண்டனம். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். மேகதாது அணை கூடாது மற்றும் காவிரி நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண வலிமையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 ஆக உயர்த்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து