முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவி வன்கொடுமை விவகாரம்: காவல் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
Arun 2024-12-28

Source: provided

சென்னை: மாணவி வன்கொடுமை விவகாரத்தில் சென்னை காவல் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரின் கீழ் உள்ள இந்த வழக்கு விசாரணையையும் மாற்றவும் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறும்போது, மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆர்-ல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என போதிப்பதைவிட அவரை கண்ணியத்துடன் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும். குற்றம் நடைபெற்றால் பெண்தான் குற்றம்சாட்டப்படுகிறார். ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும். பெண்கள் மீது குற்றம்சாட்டப்படுவது குற்றவாளிக்கு சாதகமாகி விடும். பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் யாருடனும் பேசுவதில் தவறு இல்லை. அது பெண்களுக்கான உரிமை, யாரும் தலையிட முடியாது.

ஆண் என்பதற்காக பெண்களை தொட உரிமை இல்லை. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மாணவி தனது படிப்பை தொடர்வதை அண்ணா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்புக்கான செலவை இனி அவரிடம் வசூலிக்கக்கூடாது. மாணவி படிப்பு செலவுகளை ஏற்க வேண்டும். எப்.ஐ.ஆர். லீக் ஆனதில் மாணவியின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.  காவல் ஆணையரின் கீழ் பணிபுரியும் அதிகாரியிடம் இருந்து விசாரணையை மாற்ற வேண்டும். விசாரணையை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாதது. காவல் ஆணையருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து