முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்: தே.மு.தி.க.வினர் தடையை மீறி பேரணி

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
DMDK 2024-12-28

Source: provided

சென்னை: தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் தே.மு.தி.க.வினர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதோடு பரபரப்பான சூழல் நிலவியது.

கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் செய்யப்படுகிறது.

இந்நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதற்கான குருபூஜையில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி முதல் தவெக தலைவர் விஜய் வரையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தே.மு.தி.க. தலைமை நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

மேலும் மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை பேரணி நடத்தவும் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் விஜயகாந்த் நினைவுநாள் பேரணிக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. வேண்டுமென்றே பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதாக தே.மு.தி.க.வினர் குற்றஞ்சாட்டினர்.

இருப்பினும் விஜயகாந்த் நினைவிடத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன், மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர் தலைமையில் தே.மு.தி.க.வினர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக போலீஸாருக்கும் தே.மு.தி.க.வினருக்கும் இடையே சிறிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி பேரணி நடத்தினால் கட்சியினரை கைது செய்ய பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் கைது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. சிறிய சலசலப்புக்குப் பின்னர் திட்டமிட்டபடி தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர். போலீஸார் சூழ பேரணி அமைதியாக நடந்து முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து