முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூரில் 3-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
E Palanisamy 2024-12-28

Source: provided

சென்னை: பேராவூரணி பேரூராட்சி விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் 3-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூர் மாவட்டம், 'பேராவூரணி பேரூராட்சி மன்றம்' திமுகவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது. பேராவூரணி பேரூராட்சி திமுக செயலாளர் பொறுப்பு, பேரூாட்சி மன்றத் தலைவர் பதவி முதலானவை ஒரு திமுக குடும்பத்தின் வசமாகி, ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வதில் அரசு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஒப்பந்தப் பணிகளை செய்யாமலேயே அதிகாரிகள் துணையுடன் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுசம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு, முறைகேடுகள் நடைபெற்றது ஊர்ஜிதம் செய்யப்பட்டு விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவிடாமல் துறை அமைச்சர் இருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிய வருகின்றன.

இந்த நிலையில், பேராவூரணி பேரூராட்சி மன்றத்தில் திமுகவினரால் நிகழ்த்தப்பட்டுள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல், தவறிழைத்த திமுகவினருக்கு ஆதரவாக இருந்து வரும் திமுக அரசையும், பேரூராட்சி மன்ற நிர்வாகத்தையும் கண்டித்து, அ.தி.மு.க. தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில், (3.1.2025) வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ், எம்.எல்.ஏ., தலைமையிலும்; தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சி.வி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், 3 முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து