முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - அமெரிக்கா நல்லுறவு: மன்மோகன் சிங்கிற்கு அதிபர் பைடன் புகழாரம்

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      உலகம்
America 2024-12-28

Source: provided

அமெரிக்கா: மன்மோகன் அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

2004 முதல் 2014 வரையில் இரு முறை பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை இரவு காலமானார்.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், கனடா, நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா். இந்த நிலையில், மன்மோகன் அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமரின் மன்மோகன் சிங் இழப்பு வருத்தம் அளிக்கிறது. அமெரிக்க-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் மன்மோகன் சிங்கின் முக்கிய பங்கை பாராட்டிய பைடன், மன்மோகன் தொலைநோக்கு மற்றும் அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருப்பதற்கு சாத்தியமில்லை. இரு நாடுகளின் வளர்ச்சிக்காக புதிய பாதை அமைத்து, அதை வலுப்பெறச் செய்தவர்.

அமெரிக்க- இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்குவது முதல் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பின் நாடுகளுக்கு இடையே முதல் க்வாட் கூட்டமைப்பு தொடங்குவதற்கு உதவியது வரை, அவர் நமது நாடுகளையும் உலகையும் தொடர்ந்து பல தலைமுறைகளாக பலப்படுத்தும் பாதையை உருவாக்கி தந்ததின் முன்னேற்றத்தையும் பட்டியலிட்டார். மேலும் அவர் ஒரு உண்மையான அரசியல்வாதி என்றும், அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவகர். அனைத்தையும் தாண்டி மிகவும் அன்பான, அடக்கமான மனித புனிதர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து