முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்: மத்திய அரசுக்கு மாயாவதி கோரிக்கை

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      இந்தியா
Mayavati 2024-12-28

Source: provided

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் மற்றும் இறுதிச் சடங்குகள் தொடர்பான அரசியலுக்குப் பகுஜன் சமாஜ கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் கட்டக்கூடிய இடத்தில் இறுதிச்சடங்கு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸும் பா.ஜ.க.வும் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் முதல் சீக்கியப் பிரதமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் அவரது குடும்பத்தினர் விரும்பும் இடத்தில் அவரது நினைவாக நினைவிடம் கட்ட வேண்டும். இதற்காக எந்த அரசியலையும் செய்வது சரியல்ல, இந்த விஷயங்களில் மன்மோகன் சிங்கின் குடும்பம் மற்றும் சீக்கிய சமூகத்தின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் தகனம், அவரது பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் ஒரு நினைவிடம் கட்டப்படும் இடத்தில் அவரது உடல் தகனம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர் விரும்பும் இடத்தில் அவரது நினைவிடம் கட்ட வேண்டும், இதில் அரசியல் செய்வது சரியல்ல என்று மாயாவதி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து