முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது : ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      தமிழகம்
RN-Ravi 2023 04 03

Source: provided

சென்னை : பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. 2025-ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. மேலும் இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் சில மசோதாக்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

கவர்னர் உரை மட்டுமே...

தமிழக சட்டசபைக் கூட்டம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இன்றைய கூட்டத்தில் கவர்னர் உரை மட்டுமே இடம்பெறும். மற்ற விவாதங்கள் எதுவும் இன்றைய கூட்டத்தில் அனுமதிக்கப்படாது. கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுவதற்கான அரசின் கொள்கை சார்ந்த குறிப்புகள் தொகுக்கப்பட்டு கவர்னரிடம் வழங்கப்பட்டு உள்ளது.

முழுதும் வாசிக்காமல்...

இந்த உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், சாதனை விவரங்கள் கொள்கை சார்ந்த முடிவுகள், செய்துள்ள பணிகள் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு இதே போன்ற உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் மட்டும் வாசித்துவிட்டு அமர்ந்துவிட்டார். எனவே இந்த ஆண்டு தி.மு.க. அரசின் உரையை முழுமையாக வாசிப்பாரா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும். 

எத்தனை நாள் நடக்கும்...

கவர்னர் உரை முடிந்த பிறகு சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபையை எத்தனை நாள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும். அண்மையில் மரணம் அடைந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 7-ம் தேதி சட்டசபை கூட்டம் ஒரு நாள் ஒத்தி வைக்கப்படும். இதைத் தொடர்ந்து புதன்கிழமை, வியாழக்கிழமை கவர்னர் உரை மீது விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

முக்கிய மசோதாக்கள்...

இந்த கூட்டத் தொடரில் தமிழக அரசு சார்பில் சில மசோதாக்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முக்கியமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச உள்ளனர். இதில் காரசார விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது. இது தவிர பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 பணம் வழங்கப்படாதது குறித்தும் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவார்கள் என தெரிகிறது. இதற்கு முதல்வர், அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அப்போது காரசார விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் பரபரப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து