முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க மேற்குவங்க அரசுக்கு உத்தரவு

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      இந்தியா
Kolkata 2024 08 18

கொல்கத்தா, கொல்கத்தா பெண் மருத்துவா் வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், பெண் மருத்துவர் குடும்பத்துக்கு மேற்கு வங்க மாநில அரசு  ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா சியால்டா நீதிமன்றம்  நேற்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. பலியான பெண் மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சத்தை மேற்கு வங்க அரசு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த  நிலையில், அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம்  நேற்று வெளியாகியுள்ளது.

முன்னதாக நேற்று காலை தண்டனை குறித்து இரு தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சஞ்சய் ராயை சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. முன்னதாக, சி.பி.ஐ. தரப்பில், அரிதிலும் அரிதான வழக்கு என்பதால், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து