முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.எம்.ஆர். விடைத்தாளில் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி புதிய அறிவிப்பு

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      தமிழகம்
TNPSC 2022 12 20

சென்னை, அரசு துறைகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஓ.எம்.ஆர். விடைத்தாளில் சில மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேர்வாணையம் ஓ.எம்.ஆர்.  விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஒ.எம்.ஆர். விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணய இணையதளத்தில் www.tnpsc.gov.in "ஓ.எம்.ஆர். விடைத்தாள் -மாதிரி " என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால்  நிரப்புவது தொடர்பாகவும், மேலும், பக்கம்-1ல் பகுதி-1ன் கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம்-2ல் பகுதி 1ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. எனவே. தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய ஓ.எம்.ஆர். விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து