முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிர பயிற்சியில் முகமது சமி

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      விளையாட்டு
Mohammed-Shami 2024 07 24

Source: provided

இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 22-ந் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நீண்ட நாட்களாக அணியில் இல்லாமல் இருந்த முகமது சமி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்காக தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியினருடன் முகமது சமி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

__________________________________________________________________________________

இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

கோ கோ உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணிகள் அணி மற்றும் பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கோ கோ உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், கோ கோ உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அசாத்திய திறமை, உறுதி மற்றும் குழுவாக செயல்பட்டு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் பழமையான பாரம்பரிய விளையாட்டை, இந்த வெற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. நாட்டில் உள்ள கணக்கிட முடியாத இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது உந்துதலாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

__________________________________________________________________________________

நியூசி.யை வீழ்த்திய நைஜீரியா

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - நைஜீரியா அணிகள் மோதின. மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் இந்த ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா 13 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 65 ரன்கள் எடுத்தது. நைஜீரியா தரப்பில் அதிகபட்சமாக லில்லியன் உதே 19 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 66 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நியூசிலாந்து அணி 13 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த நைஜீரியா 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அனிகா டாட் 19 ரன்கள் எடுத்தார். நைஜீரியா தரப்பில் யூசன் அமைதி, அடேஷோலா அடேகுன்லே, அதிர்ஷ்ட பக்தி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து