முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      தமிழகம்
Chavku-Shankar 2024-05-06

சென்னை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், புழல் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் விடுதலையானார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் மீது அவதுாறு பரப்பியதாக கடந்தாண்டு தமிழகத்தின் வெவ்வேறு ஸ்டேஷன்களில் வழக்குகள் பதியப்பட்டன. குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. ஒரு முறை குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு முறை குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இத்தகைய பின்னணியில், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. குண்டர் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் வழக்கு குறித்து, தவறான தகவல்களை பரப்பியதாக அளித்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சவுக்கு சங்கரை டிச.,24ல் கைது செய்தனர்.  அவரது ஜாமின் மனுக்கள் கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் ஜாமின் கோரிய மனு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, ஜன.,17ம் தேதியன்று ஜாமின் வழங்கியதுடன், போலீசாருக்கு கண்டனமும் தெரிவித்தார்.

இந்நிலையில், கோர்ட்டில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பித்தல் தொடர்பான தொழில்நுட்ப ரீதியான காரணங்களால், அவரது விடுதலை தாமதம் ஆனது. இதையடுத்து நேற்று ஜாமின் உத்தரவில் மாறுதல் செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். 'இந்த உத்தரவு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உடன், சிறை அதிகாரிகள் மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும். சான்றளிக்கப்பட்ட நகலின் வருகைக்காக காத்திருக்க தேவையில்லை' என்று நீதிபதி உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில், நேற்று மாலை சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து