முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த வணிகர் நல வாரிய குடும்பத்தினர்களுக்கு அமைச்சர் நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      தமிழகம்
murthy 2025-01-21

Source: provided

சென்னை: மறைந்த வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் 2 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவிக்கான காசோலைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து மறைந்த இரண்டு வணிகர்களின் குடும்பத்தினர்களுக்கு குடும்ப நல நிதி உதவியாக தலா ரூ.3,00,000-க்கான காசோலைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தலைமையில் நேற்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மறைந்த இரண்டு வணிகர்களின் குடும்பத்தினரான திருத்துறைப்பூண்டியைச் சார்ந்த ரா.பவானி மற்றும் சேலத்தை சார்ந்த மே.உஷா ஆகியோருக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பாக குடும்ப நல நிதி உதவித் தொகை தலா ரூ.3,00,000- க்கான காசோலைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

மேலும் அனைத்து இணை ஆணையர்களும் தங்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வணிகர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதை உறுதி செய்தல், உள்ளீட்டு வரி வரவு  மனுக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தவறுகள் ஏதும் நடக்காமல் கண்காணித்தல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டு அரசுக்கு வரி வருவாய் ஈட்டித்தர ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன், மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து