முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 40,168 மாணவர்கள் பயன் அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      தமிழகம்
kv-chezhiyan 2025-01-21

Source: provided

சென்னை: கடந்த நான்காண்டுகளில் மொத்தம் 40,168 அரசுப்பள்ளி மாணவர்கள்  7.5 சதவீத  இடஒதுக்கீட்டினால் பயனடைந்துள்ளார்கள்  என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவிலேயே தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக உயர்த்தி பல்வேறு சாதனைகளைத் திராவிட மாடல் அரசு படைத்து வருகிறது.

திராவிட மாடல் அரசின் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்களை செயல்படுத்தி மாணவர்களின்  உயர்கல்வி கனவை சாத்தியப்படுத்தியவர் தமிழ்நாடு முதல்வர்.

இத்திட்டங்களை போலவே, உயர்கல்வி சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உரிய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் எனும் நோக்கத்துடன்  பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் என முதல்வர் அறிவித்தார்.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு , 1,165 கோடி ரூபாய்க்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,168 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.  குறிப்பாக தொழிற்படிப்புகளில் 35,530 பேர், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 2,382 பேர், வேளாண் படிப்புகளில் 1,369 பேர், கால்நடை மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்புகளில் 261 பேர், சட்டப் படிப்புகளில் 626 பேர் என மொத்தம் 40,168 அரசுப்பள்ளி மாணவர்கள் கடந்த நான்காண்டுகளில் இந்த இடஒதுக்கீட்டினால் பயனடைந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டின் தெருக்களில் முதல்வர் நடக்கும் தருணமெல்லாம் அவரை அப்பா! அப்பா! என உள்ளன்போடு தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்கள் அழைத்து மகிழ்வது முதல்வரின் இதுபோன்ற போன்ற சாதனைகளால் தான். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து