முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு பகுதிநேர வேலைகளை கைவிடுகிறார்கள்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      உலகம்
Trump

Source: provided

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவில் பகுதிநேர வேலைகளை இந்திய மாணவர்கள் கைவிடுகிறார்கள்.

அமெரிக்காவில் கல்வி பயில எப்-1 விசா பெற்றுச் சென்றிருக்கும் மாணவர்கள் ஒரு வாரத்தில் 20 மணி நேரம் பணியாற்றலாம் என்ற விதி இருந்தபோதும், தங்களது பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்துக்காக பகுதிநேர வேலைகளை இந்திய மாணவர்கள் கைவிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகங்கள், எரிவாயு நிரப்பும் நிலையங்கள், சில்லறை வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் இந்திய மாணவர்கள் பகுதிநேர வேலை செய்து, அதன் மூலம் ஈட்டும் வருவாயைக் கொண்டு தங்களது அத்தியாவசிய தேவைகளை சமாளித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு மணி நேரத்துக்கு 7 முதல் 10 டாலர்கள் வரை அங்கு வருவாய் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு மாணவர்கள் நாள் ஒன்றுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ப அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வரை பணியாற்றி சம்பளம் ஈட்டி வந்துள்ளனர்.

ஆனால், குடிவரவு அதிகாரிகள், அங்கீகரிக்கப்படாத வேலைகளை ரத்து செய்யும் அபாயம் இருப்பதாகக் கேள்விப்பட்ட பிறகு கடந்த வாரம் ஏராளமான இந்திய மாணவர்கள், தங்களது பகுதிநேர வேலைகளை விட்டுவிட்டனர்.

கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் வரை கடன்பெற்றுத்தான், அமெரிக்காவில் கல்வி பயில வந்திருக்கிறார்கள் பெரும்பாலான மாணவர்கள். ஆனால், இந்த ஒரு காரணத்தால் தங்களது எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக்கு ஏதேனும் பங்கம் வந்துவிடக் கூடாது என்றுதான் அவர்கள் அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.

நிலைமை எவ்வாறு செல்கிறது என்பதைப் பொறுத்து மீண்டும் பகுதிநேர வேலையைத் தொடர்வது குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என்றும், அதுவரை செலவுகளைக் குறைத்து, கடன் வாங்கி, குடும்பத்தாரிடம் பணம் அனுப்பச் சொல்லித்தான் நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலையில் இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து