முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ரூ.500-க்கு சிலிண்டர்: பாரதிய ஜனதாவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதி வெளியீடு

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      இந்தியா
BJP 2023-11-05

Source: provided

புதுடில்லி: டில்லியில் பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ஜ.க.வின் மூன்றாவது தேர்தல் வாக்குறுதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.

தலைநகரில் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-இல் நடைபெறவுள்ளதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டில்லியில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் என்ற போட்டி நிலவி வருகின்றது. நிகழவுள்ள பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில்,  ஏற்கனவே, இரண்டு பகுதிகளாகத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பா.ஜ.க., இறுதிக்கட்ட தேர்தல் வாக்குறுதியை இன்று வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை அமித் ஷா வெளியிட்டார்.

பா.ஜ.க. வெளியிடுவது வெற்று வாக்குறுதிகள் அல்ல, டில்லியில் செய்யவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுள்ளன. யமுனையைச் சுத்தம் செய்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் மற்றும் டில்லியை மாசு இல்லாததாக மாற்றுதல் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் நிறைவேற்றவில்லை என்று ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்ததைப் போல ஊழல் அளவு ஒருபோதும் இருக்காது. சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.41,000 கோடி, ரயில் பாதைகள் அமைக்க ரூ.15,000 கோடி, டில்லியில் விமான நிலையத்திற்கு ரூ.21,000 கோடி செலவிட்டது.

ஏழைகளுக்கான எந்த நலத்திட்டங்களும் டில்லியில் நிறுத்தப்படாது. 1,700 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புப் பகுதிகளை வாங்குதல், விற்றல் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட முழு உரிமைகளை வழங்கும். தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கும். அவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு, ரூ.5 லத்துக்குக்கான விபத்து காப்பீடு வழங்கும்.

50 ஆயிரம் அரசுப் பணியிடங்களை நிரப்பும், 20 லட்சம் சுயதொழில் செய்பவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். டில்லியில் ஆட்சி அமைத்தால் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்தும். ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும். முக்கியமாக பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும். ஆம் ஆத்மி போன்று பொய் வாக்குறுதிகளை பா.ஜ.க. ஒருபோதும் அளிக்காது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து