முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனேவில் பரவும் அரியவகை நோயால் 73 பேர் பாதிப்பு

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      இந்தியா
virus

Source: provided

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம் என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும்.

இந்த அரிய வகை நோயால் 73 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேருக்கு செயற்கை சுவாசத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும்.

இந்த நோய் பாதிப்பு 4 நாட்களில் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக பரிசோதனையை தொடங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட 73 நோயாளிகளில் 44 பேர் புனே கிராமப்புறத்திலும், 11 பேர் புனே நகராட்சிப் பகுதியிலும், 15 பேர் சின்ச்வாட் நகராட்சிப் பகுதியிலும் உள்ளனர். இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் தெரிந்தவுடன் நரம்பியல் டாக்டரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து