முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவி பலாத்கார வழக்கு: தமிழ்நாடு அரசின் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது ஜன., 27-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இது தொடர்பாகச் சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆர்.-ல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என்பதால் எந்த கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும். எப்ஐஆரை வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் இந்த வழக்கு தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பை நடத்தச் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை எனவே அவர் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் மாநில அரசு சார்பில் வக்கீல் டி.குமணன் தாக்கல் செய்த இந்த மேல்முறையீடு மனு, வருகிற 27-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து