முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய போரை ஜெலன்ஸ்கி தவிர்த்து இருக்க வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      உலகம்
Trump 2024-02-17

Source: provided

வாஷிங்டன் : ரஷியவை-ஜெலன்ஸ்கி எதிர்த்து இருக்க கூடாது அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேட்டோவில் இணைவது என்ற உக்ரைனின் முடிவுக்கு எதிராக அந்நாட்டின் மீது ரஷிய படையெடுத்தது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகள் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை ரஷியா முதலில் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. இதன் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. தொடர்ந்து போரானது 3-ம் ஆண்டு நிறைவை நோக்கி செல்கிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், பாக்ஸ் நியூசுக்கு அளித்த பேட்டியில், ஜெலன்ஸ்கி மிக பெரிய, அதிக சக்தி வாய்ந்த நாட்டுக்கு எதிராக போரிட்டு வருகிறார். ரஷியாவின் ராணுவ பலத்திற்கு எதிராக போரிடுவது என்பது வீணானது. அதனை அவர் செய்திருக்க கூடாது. போரை தவிர்க்க, ரஷிய அதிபர் புதினுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்க வேண்டும். அதனை நான் எளிதில் செய்து இருப்பேன் என்றார்.

இரு நாடுகளின் மோதலால் லட்சக்கணக்கானோர் காயமடைந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளனர். எனினும், ரஷியா விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பெரிய அளவில் வரிகளை விதிக்கும். பொருளாதார தடைகளையும் விதிக்கும் என டிரம்ப் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து