முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளியில் மின்சாரம் தாக்கி பலியான மாணவன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி : அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      தமிழகம்
Periyakaruppan 2023 06 27

Source: provided

சிவகங்கை : பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர் கணினி அறிவியல் வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது, கணினியை இணைக்க முயன்றபோது, மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது. மாணவர் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். மாணவரின் மரணம் தொடர்பான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ,மாணவரின் பெற்றோரிடம் உரிய தகவல்கள் தெரியப்படுத்தவில்லை என்று அ.ம.மு.க., பொதுசெயலாளர் தினகரன், பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட அதிகாரிகள், பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினர். இந்த சம்பவத்தில்  விசாரணை நடத்திய முதன்மைக்கல்வி அலுவலர், சம்பவம் பற்றி பள்ளியின் தலைமையாசிரியர் கணேசன் மற்றும் வகுப்பாசிரியர் பாண்டி முருகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து