முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் நாளை முதல் அமல்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      இந்தியா
mODI 2023-05-25

Source: provided

டேராடூன் : சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக உத்தரகண்ட் மாநிலத்தில் நாளை முதல் (ஜன.,27) பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு, அவரவர் மத நடைமுறைகளின் அடிப்படையில் திருமணம், விவாக ரத்து, சொத்துரிமை, தத்து எடுப்பது, ஜீவனாம்சம் தொடர்பான சட்டங்கள் தற்போது அமலில் உள்ளன.

இதை மாற்றி, அனைத்து மதத்தினருக்கும் ஒரே பொது சிவில் சட்டமாக இருக்க வேண்டும் என்பது நீண்ட காலமாக இருந்து வரும் கோரிக்கை. அதன் அடிப்படையில் பா.ஜ., ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து உத்தரகண்ட் மாநில தலைமை செயலாளர் ஷைலேஷ் பகவுலி கூறியதாவது:  பிரதமர் மோடி வரும் 28ம் தேதி உத்தரகண்ட் வருகிறார். அவர் வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, மாநிலத்தில் ஜன.,27ல் பொது சிவில் சட்டம் அமல் செய்யப்படுகிறது.  இதையொட்டி, பொது சிவில் சட்டத்துக்கான இணைய தளத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். சுதந்திர இந்தியாவில், பொது சிவில் சட்டத்தை அமல் செய்யும் முதல் மாநிலமாக உத்தரகண்ட் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து