முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை சேர்ந்த வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் அறிவிப்பு : ஷோபனா - நல்லி குப்புசாமிக்கும் பத்ம விருதுகள்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      தமிழகம்
Ajith-kumar-2025-1-15

Source: provided

புதுடில்லி : இந்தியாவின் உயிரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரபல தமிழ் திரைப்பட நடிகர், பிரபல திரைப்பட நடிகையும், நடன இசைக்கலைஞருமான ஷோபனா மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புச்சாமிக்கு பத்ம பூஷன்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும்.அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

பத்மஸ்ரீ விருது பெறுவோர் விவரம் வருமாறு:- பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங், பிரேசிலைச் சேர்ந்த ஹிந்து மதத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஜோனஸ் மசட்டி, நாவல் ஆசிரியர் ஜெக்தீஷ் ஜோஷிலா, புதுச்சேரியைச் சேர்ந்த தவில் வித்வான் தட்சிணாமூர்த்தி, 

டில்லியைச் சேர்ந்த டாக்டர் நீரஜ் பாத்லா, குவைத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஷாகியா அல் ஷபா, சிக்கிமைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர் நரேன் குரூங், ஆன்மிக பாடகர் பேரு சிங் சவுகான், நாகாலாந்தை சேர்ந்த விவசாயி ஹங்திங், பீஹாரைச் சேர்ந்த பத்திரிகையாளர் பீம் சிங்பாவேஷ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின் மாருதி புஜன்க்ராவ் சிதம்பள்ளி, கர்நாடகாவின் பொம்மலாட்ட கலைஞர் பிம்வ்வா டோடாபாலப்பா, ம.பி.,யின் கார்கோன் நகரைச் சேர்ந்த சாலி ஹோல்கர், ராஜஸ்தானைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி பதூல் பேகம், தமிழகத்தைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், மேற்கு வங்கத்தை சேர்ந்த தக் இசைக் கலைஞர் கோகுல சந்திர தாஸ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரபல தமிழ் திரைப்பட நடிகர், பிரபல திரைப்பட நடிகையும், நடன இசைக்கலைஞருமான ஷோபனா மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புச்சாமிக்கு பத்ம பூஷன்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து