முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்படமாகும் கங்குலியின் வாழ்க்கை

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      விளையாட்டு
Ganguly 2023-08-26

Source: provided

சமீப காலங்களாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மகேந்திரசிங் தோனி வாழ்க்கை சினிமா படமாக வந்தது. சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையையும் ஆவண படமாக வெளியிட்டனர். பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த மிதாலி ராஜ் வாழ்க்கையும் படமானது. அந்த வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையையும் படமாக எடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு கங்குலியும் ஒப்புதல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல இயக்குநர் விக்ரமாதித்ய மோட்வானே இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

கங்குலியின் சிறுவயது வாழ்க்கை முதல் பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டது வரை உள்ள சம்பவங்கள் படத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குலி வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.

_____________________________________________________________________________

ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டியும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளும் நடைபெறுகின்றன. 

இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான தொடருக்கான (டெஸ்ட் + ஒருநாள் + டி20) ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு கிரேக் எர்வின் கேப்டனாகவும், டி20 அணிக்கு சிக்கந்தர் ராசா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

_____________________________________________________________________________

விமர்சனங்களுக்கு சுப்மன் பதிலடி 

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி 23-ந் தேதி தொடங்கிய ஒரு போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான பஞ்சாப் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, மோசமான ஆட்டத்தின் மூலம் 55 ரன்னில் சுருண்டது. அதிகம் எதிர்பார்த்த நட்சத்திர வீரரான சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணி ஸ்மரண் ரவிச்சந்திரனின் இரட்டை (203) சதத்தால் 475 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் கர்நாடக அணி 420 ரன்கள் முன்னிலை பெற்றது.

கடினமாக சூழலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில்லை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 213 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் கர்நாடக அணி இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் வெளியேறி நிலையில் சுப்மன் கில் மீது பல்வேறு விமர்சங்கள் எழுந்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சில் சதம் விளாசியதன் மூலம் தன் மீதான விமர்சங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து