முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே மைதான சர்ச்சைக்கு வாசிம் ஜாபர் கூறும் தீர்வு

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      விளையாட்டு
Vasim-Akram 2024-05-11

Source: provided

மும்பை : ஒரே மைதானத்தில் விளையாடுவதாக இந்திய அணி மீதான விமர்சனங்களை தவிர்க்க முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்  தீர்வு ஒன்றை தெரிவித்துள்ளார்.

கடும் விமர்சனங்கள்... 

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை ஒரே மைதானத்தில் ஆட முடிவது அந்த அணிக்கு வழங்கப்பட்ட நியாயமற்ற சாதகம் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்களை தவிர்க்க இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்  தீர்வு ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  ஐ.சி.சி. இந்திய அணியை ஒரு போட்டியை ஷார்ஜாவிலும் ஒரு போட்டியை அபுதாபியிலும் ஒரு போட்டியை துபாயிலும் ஆடக் கேட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் பயணமும் இருந்திருக்கும் கண்டிஷன்களும் வேறு வேறாக இருந்திருக்கும் இன்று எழும் விமர்சனங்களைத் தவிர்த்திருக்கலாம். 

சிக்கல்...

இந்திய அணி, பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது என்பது தெரிவு, இது எல்லா அணிகளுக்கும் உண்டுதானே. ஆனால், இந்திய அணி அங்கு செல்லாததற்கு அரசியல் காரணங்கள் இருக்கின்றன. பின் என்ன தெரிவு இருக்கிறது? இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தாக வேண்டும். எப்படி நடத்துவது? நடுநிலை மைதானங்களில்தான். அப்படி இருக்கையில் துபாயில் ஆடுவது பிரச்சினையில்லை, துபாயிலேயே ஆடுவதுதான் சிக்கல். அபுதாபி, ஷார்ஜா என்று பிரித்து விளையாடியிருந்தால் இன்று ‘நியாயமற்ற சாதகம்’ என்ற விமர்சனங்கள் வந்திருக்காது. இப்படித்தான் இந்த உரையாடலை மவுனப்படுத்தியிருக்க வேடும்” என்று வாசிம் ஜாபர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து