முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை: சீமான் தாக்கு

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      தமிழகம்
Seeman 2023 01 22

Source: provided

சேலம் : தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. சாத்தானின் ஆட்சி நடக்கிறது,'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 சேலம் ஓமலூரில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசியல் என்றால் அழுத்தம் தான். இதில் வேறு ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லாத வழக்கு இது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்தை நாடியது நான் தான். இந்த வழக்கு முற்று பெற்றுவிட்டால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இருக்கிற வரை இழுத்து இழுத்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்.

சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அண்ணா பல்கலை விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து என்ன? கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் கொன்றவர்கள் வழக்கில் கைதானவர் 90 நாளில் வெளியில் வந்து சாராயம் காய்ச்சினார், இது என்ன ஆட்சி சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? 

நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயம் காட்டுகிறது. நான் வளர்ந்துவிடுவேன் என நினைக்கிறீர்கள். அச்சப்படுகிறீர்கள். நடுக்கம் வருவதால் அந்த பெண்ணை கூட்டி வந்து சண்டை போடுகிறீர்கள்.  இந்த விவகாரத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வழக்கை தொடர்ந்தேன். ஆனால், அது சரியாக வரவில்லை. சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளேன். இவ்வாறு சீமான் கூறினார்.

போலீசார் முன்பு ஆஜராக விமானம் மூலம் சென்னை திரும்பிய சீமான் விமான நிலையத்தில் மீண்டும் நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: விசாரணைக்கு வருவதாக சொன்னேன். இரவு 8 மணிக்கு வரும்படி தெரிவித்தனர். சம்மனை ஒட்டும் போது தடுக்கவில்லை. எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி இருக்கலாம். வீட்டில் நான் இல்லை என்றால், சம்மனை எனது மனைவியிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம். எனக்கு சம்மன் கொடுக்காமல் கதவில் ஒட்டிச் சென்றது அநாகரிகம்.

கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை. என்னை திட்டமிட்டு அவமானப்படுத்த முயற்சி நடக்கிறது. நடிகை விஜயலட்சுமி புகாரில் ஜெயலலிதா, இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது, மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை வைத்து என்னையும், எனது குடும்பத்தையும் வன்கொடுமை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து