முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனேயில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      இந்தியா
Jail 2024-10-04

Source: provided

மும்பை : புனேயில் இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனே ஸ்வர்கேட்டில் உள்ள பஸ்நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்குச் செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில் காத்திருந்தார். தனியாக நின்ற இளம்பெண்ணை நோட்டமிட்ட ஆசாமி ஒருவன் அவரிடம் நெருங்கிவந்தான். அந்த ஆசாமி, இளம்பெண்ணிடம் பார்த்து நைசாக பேச்சு கொடுத்தான். நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு பஸ் இங்கு வராது என் கூறிய அவன், பஸ் நிற்கும் பகுதிக்கு அழைத்துச் செல்வதாக கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்றான்.

பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் நின்ற மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான சிவ்சாகி என்ற சொகுசு பஸ்சை காட்டி, இதுதான் நீங்கள் போகவேண்டிய ஊருக்குச் செல்லும் பஸ் என கூறியுள்ளான். அந்த பஸ்சில் இளம்பெண் ஏறியபோது, விளக்கு எல்லாம் அணைந்து கிடந்தது. டிரைவர், நடத்துனர் வந்த உடன் பஸ் கிளம்பி விடும் என்றான். இளம்பெண், பஸ்சுக்குள்ஏறிச் சென்றார். அந்த ஆசாமியும் பின்தொடர்ந்து பஸ்சில் ஏறினான். திடீரென பஸ்சின் கதவைப் பூட்டினான். அது ஏ.சி. பஸ் என்பதால் ஜன்னல் கண்ணாடி அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆசாமி பெண்ணை பஸ்சுக்குள் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டான்.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து தோழிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தைச் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக அவர் போலீசிலும் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது, பலாத்கார ஆசாமியின் அடையாளம் தெரியவந்தது. அவன் புனே மாவட்டம் சிக்ராப்பூரை சேர்ந்த தத்தாத்ரேய காடே (36), என தெரிய வந்தது. அவனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே, குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தத்தாத்ரேய காடே புனேவின் ஷிரூரில் கைது செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து