முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கால்பந்து போட்டி

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      விளையாட்டு
Messi 2023 06 25

Source: provided

நவி மும்பை : எல் கிளாசிக்கோ எனப்படும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.

இரண்டு பிரிவினர்...

உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து ரசிகர்களை இரண்டாகப் பிரிக்கலாம். அதில் ஒரு பிரிவினர் பார்சிலோனா பக்கமும் மற்றொரு பிரிவினர் ரியல் மாட்ரிட் பக்கமும் இருப்பார்கள். மெஸ்ஸி பார்சிலோனா அணிக்கும் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்கும் விளையாடி அவர்கள் போட்டி என்றாலே எல் கிளாசிக்கோ என்ற அளவுக்கு புகழ்பெற்றுள்ளது. தற்போது, மெஸ்ஸி இன்டர் மியாமி அணியிலும் ரொனால்டோ அல் நசீர் அணியிலும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக...

இந்நிலையில், பார்சிலோனா - ரியல் மாட்ரிட் போட்டிகள் நவி மும்பையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் வீரர்கள், லெஜெண்டுகள் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். போர்ச்சுகளின் லூயிஸ் பிகோ, பிரேசிலின் உலகக் கோப்பை வெற்றியாளர் ரிவால்டோ, ஸ்பானிஷின் பெர்னாண்டோ மொரினிட்ஸ் தொடக்கப் போட்டியில் விளையாடுகிறார்கள். ஏப்.6ஆம் தேதி, நவி மும்பையில் டி.ஒய்.பாட்டீல் திடலில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டியில் இன்னும் கூடுதலாக பல லெஜண்டுகள் வருவார்கள் என போட்டியை நடத்தும் தி ஸ்போர்ட் பிரன்ட் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து