முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்மன் கில்லுக்கு தவான் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      விளையாட்டு
Subman-Gill 2024-07-02

Source: provided

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுப்மன் கில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் 46 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த நிலையில், இந்திய அணியில் சுப்மன் கில் நிகழ்காலத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார் எனவும், அணியில் அவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சுப்மன் கில் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் மிகவும் அழகாக பேட்டிங் செய்கிறார். அணிக்காக தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கிறார். அவருடைய நிகழ்காலம் சிறப்பாக இருக்கிறது. இந்திய அணியில் அவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. இளம் வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்கள் சிறப்பாக செயல்பட ரோஹித் சர்மா உதவுகிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். கடினமான சூழல்களில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்தும் அவர் இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். இதுபோன்ற அறிவுரைகள் மிகவும் முக்கியம் என்றார்.

___________________________________________________________________________________

பிராக் செஸ்: பிரக்ஞானந்தா டிரா

பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன் முதல் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா , டேவிட் நவராவுடன் (செக்குடியரசு) ஆகியோர் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 66-வது நகர்த்தலில் டேவிட் நவராவுடன் டிரா கண்டார். மற்றொரு இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் 76-வது நகர்த்தலில் நுயென் தாய் டாய் வானுடன் (செக்குடியரசு) டிரா செய்தார். 

___________________________________________________________________________________

அப்படியே ஸ்டார்க் மாதிரி இருந்தது: ஐ.சி.சி.

சாம்பியன்ஸ் டிராபியின் 10-வது போட்டியில் ஆஸி. -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கன் அணி முதலில் பேட்டிங் செய்தது.  இதில் முதல் ஓவரில் ஆஸி. இளம் வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சார் ஜான்சன் வீசீய 5ஆவது பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் போல்ட் ஆனார்.  இந்தப் பந்து ஆஸி.யின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் பந்துவீசுவது போலவே இருந்ததாக வர்ணனையாளர்கள் புகழ்ந்து பேசினார்கள்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஐ.சி.சி. மிட்செல் ஸ்டார்க், ஸ்பென்சர் ஜான்சன் விக்கெட் எடுத்த விடியோக்களை ஒப்புமைப்படுத்தி பதிவிட்டுள்ளது. இதனால் ஆஸி. ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆஸி.யின் முக்கியமான மூவர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் காயம், தனிப்பட்ட காரணங்களால் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வில்லை. அனுபவமிக்க வீரர்கள் இல்லையென்றால் என்ன இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தற்போது ஆப்கானிஸ்தான் அணி 27 ஓவர்கள் முடிவில் 137/3 ரன்கள் எடுத்துள்ளது.

---------------------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து