முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்; கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      தமிழகம்
CM-2 2024 07 23

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி வகினர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக நீர்வள துறை அமைச்சர் மற்றும் தி.மு.க.வின் பொதுச்செயலாளரான துரை முருகன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் விழாவில் பங்கேற்று தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், தி.க. தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து