முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவியிடம் ஆபாச பேச்சு: ஆசிரியர் பணியிடை நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      தமிழகம்
Teacher 2023-05-16

Source: provided

சேலம் : பிளஸ்-2 மாணவியிடம் ஆபாசமாக பேசியதால் தற்காலிய ஆசிரியர் பணியிடை நீக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள தும்பல் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 13-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி பெற்றோருடன் தும்பல் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றார். பின்னர் துணிகள் எடுத்துவிட்டு வெளியே வந்த அவரை அங்கு நின்று கொண்டிருந்த நெய்யமலை அரசு பள்ளியில் தற்காலிகமாக பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர் ராஜ்குமார் (வயது 28) என்பவர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி அவரை கண்டித்துவிட்டு அங்கிருந்து பெற்றோருடன் சென்று விட்டார்.இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி ராஜ்குமார் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாளை பெறுவதற்காக மாணவி படிக்கும் பள்ளிக்கு வந்தார்.

அப்போது மாணவி அவரை பார்த்ததும் தன்னை ஆபாசமாக பேசியது குறித்து ஆசிரியர் ஒருவரிடம் தெரிவித்தார். இதற்கு அவர் இதுகுறித்து பின்னர் அந்த ஆசிரியரிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று கூறி மாணவியை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அதைத்தொடர்ந்து பெற்றோரும் பள்ளிக்கு சென்று முறையிட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே பிளஸ்-2 மாணவியிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே மாணவியிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து தற்காலிக பட்டதாரி ஆசிரியர் ராஜ்குமாரை பணிநீக்கம் செய்து பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து