முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்த முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      தமிழகம்
RBU 2023-08-22

Source: provided

சென்னை: அ.தி.மு.க.வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விடமுடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க.வை மீட்டெடுத்து இயக்கத்தை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

களத்தில் மக்களை சந்தித்து உண்மையை எடுத்துச் சொல்வோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டுவர அயராது உழைப்பவர் எடப்பாடி பழனிசாமி.மக்கள் சக்திதான் ஒரு இயக்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். அந்த சக்தியை அ.தி.மு.க. பெற்றுள்ளது. அ,தி,மு.க.வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விடமுடியாது. விவேகத்துடன் செயல்பட்டு 4 ஆண்டுகள் முழு ஆட்சியையும் சிறப்பாக நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். எதிரிகள் மற்றும் துரோகிகளின் வாதங்களால் அ.தி.மு.க.வை அசைத்துப் பார்க்க முடியாது. " என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் விலகலுக்கு பின் அந்த இடத்திற்கு ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே கருத்து கூறிய நிலையில், ஆர்.பி .உதயகுமார் வீடியோ மூலம் பதிலடி கொடுத்திருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து