முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்மன் கில் சாதனை

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      விளையாட்டு
Gill-2025-02-13

3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக துணை கேப்டன் சுப்மன் கில் 112 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 3-0 என இந்திய அணி தொடரை வென்றது. 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 2,587 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.

இந்தத் தொடரில் 87, 60, 112 என மூன்று போட்டிகளிலும் சேர்த்து 259 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார் சுப்மன் கில். இந்தியாவுக்காக அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் சமன் செய்துள்ளார் சுப்மன் கில். டி20, டெஸ்ட்டில் சொதப்பினாலும் சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகிறார்.

பாக்., வீரர்களுக்கு அபராதம்

பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்கியது. கடைசி ஒருநாள் போட்டியில் தெ.ஆ. அணி 352/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிளாசன் 87, பவுமா 82, ப்ரிட்ஸ்கி 83 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 355/4 எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் அதிகபட்ச சேஸிங் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா பேட்டிங் ஆடும்போது 28ஆவது ஓவரில் ஷாகின் ஷா அப்ரிடி வேண்டுமென்றே மேத்திவ் பிரிட்ஜ்கி ரன் ஓடும்போது இடைமறித்தார். பின்னர், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அவருக்கு 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்ததாக 29ஆவது ஓவரில் டெம்பா பவுமா விக்கெட்டினை அவருக்கு அருகில் நெருக்கமாகச் சென்று கொண்டாடியதற்காக ஷகில், குலாம் ஆகிய இருவருக்கும் தலா போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. சமீபத்தில் பிஜிடி தொடரில் சாம் கான்ஸ்டாஸை மோதிய விராட் கோலிக்கு 20 சதவிகிதம் அபராதம் விதித்ததும் குறிப்பிடத்தக்கது. பிப்.14ஆம் தேதி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து